\
ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் கைப்பற்றிய திமுக

ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் கைப்பற்றிய திமுக

ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் கைப்பற்றிய திமுக
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.

மொத்த இடங்கள் 18இல் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் சங்கீதா பாரி ஒன்றியத் தலைவர் ஆனார். திமுகவைச் சேர்ந்த சங்கீதா பாரிக்கு அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 5 திமுக, 4 அதிமுக, 1 சுயேச்சை, 2 பாமக என 12 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார் சங்கீதா பாரி.

இந்நிலையில் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவின் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காயத்ரி பிரபாகரன் தலைமையில் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com