'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' - திருமாவளவன்

'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' - திருமாவளவன்

'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' - திருமாவளவன்
Published on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோவை, கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்தனர். ஒரே நாளில் 13 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்ததால் அண்ணா அறிவாலயத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திமுக வேட்பாளர்களை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அதிமுக தேய்ந்தாலும் சிதைந்தாலும் அந்த இடத்திற்கு பா.ஜ.க.வால் வர முடியாது என உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படிக்க: வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக: உள்ளாட்சித் தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com