
திமுக தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது திமுக தலைவர் கருணாநிதி எங்களை அடையாளம் கண்டு கொண்டார். விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் வழக்கத்தை விட அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்படுகிறது.