'நான் ஆளும் கட்சின்னு தெரியாதா?' - காவல்துறையினரிடம் திமுக நகர செயலாளர் வாக்குவாதம்

'நான் ஆளும் கட்சின்னு தெரியாதா?' - காவல்துறையினரிடம் திமுக நகர செயலாளர் வாக்குவாதம்
'நான் ஆளும் கட்சின்னு தெரியாதா?' - காவல்துறையினரிடம் திமுக நகர செயலாளர் வாக்குவாதம்

'நான் ஆளும் கட்சி என்று உங்களுக்கு தெரியாதா ரிசிப்ட் காமிச்சாதான் உள்ள அனுப்புவீர்களா?' என்று கூறி நாகூர் திமுக நகர செயலாளர் செந்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நாகை நகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணியளவில் தொடங்கியது. நாகப்பட்டினம் நகராட்சியில் நாகூர் 7வது வார்டில் போட்டியிடும் திமுக நாகூர் நகர செயலாளர் செந்தில் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களோடு வேட்பு மனு பரிசீலனைக்கு வந்தார். அப்போது, காவலர்கள் அவரை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி என கூறினர். இதனால், நகர செயலாளர் செந்திலுக்கும் காவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது செந்தில், 'நான் தான் வேட்பாளர்' என்று கூறினார். அதற்கான வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்குமாறு காவலர்கள் கூறினர். அதற்கு அவர், 'நான் ஆளும் கட்சி என்று உங்களுக்கு தெரியாதா? ரிசிப்ட் காமிச்சாதான் உள்ள அனுப்புவீர்களா?' என்று காவல்துறையினரிடம் செந்தில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

அதற்கு அங்கிருந்த காவலர்கள், 'ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் சரி வேட்பாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பித்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படும்' என்று கூறியதால் தொடர் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதையடுத்து, திமுகவினர் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com