‌முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தியில்லை: திமுக வெளிநடப்பு

‌முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தியில்லை: திமுக வெளிநடப்பு

‌முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தியில்லை: திமுக வெளிநடப்பு
Published on

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக முதலமைச்சர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பிற்கு பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீஸ் தடியடி நடத்தியது தொடர்பாக, நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் பதிலளிக்காத காரணத்தினால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, டெல்லிக்கும் மதுரைக்கும் விமானத்தில் பறந்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் 10 நிமிட தூரத்தில் உள்ள மெரினாவிற்கு சென்று போராட்டக்கார்களிடம் அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்திருந்தால் போராட்டம் அமைதியான முறையில் கைவிடப்பட்டிருக்கும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com