கேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி

கேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி

கேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி
Published on

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு திமுக சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கேரள மக்களின் துயர் துடைக்க ஏற்கனவே தங்கள் கட்சி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் தொண்டர்கள் நிவாரணப் பொருட்களையும் நிதியுதவியையும் தந்து வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக திமுக எம்பி, எம்எல்ஏக்களும் ஒரு மாத சம்பளத்தை கேரள மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரளா வெள்ளத்திற்கு நிவாரணமாக அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ரூ.10 லட்சம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒருமாத ஊதியத்தையும் வழங்குவார்கள் என திருநாவுக்கரசர் தெரிவித்து இருந்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com