மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக ஆவடியில் ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு

மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக ஆவடியில் ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு

மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக ஆவடியில் ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு
Published on

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக திமுக சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலளார் ஆவடி நாசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மு.கஸ்டாலினை இழிவாக பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து நாளை, காலை 9 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு நாசர் தலைமை தாங்க உள்ளார். இந்த ஆர்பாட்டத்தில் பூவிருந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரேன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com