மேடையேறி தகராறில் ஈடுபட்ட திமுகவினர்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தின்போது கைகலப்பு

மேடையேறி தகராறில் ஈடுபட்ட திமுகவினர்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தின்போது கைகலப்பு

மேடையேறி தகராறில் ஈடுபட்ட திமுகவினர்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தின்போது கைகலப்பு
Published on

மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக ஒன்றிய செயலாளர் மேடையில் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், அதிமுக மற்றும் திமுகவினரையும் குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்னாள் தமிழக முதல்வரை மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ஈ.டி.டி.செங்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் மேடையில் ஏறி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஹிம்ளரிடம் ‘மரியாதையாக பேசுங்க’ எனக் கூறி, மைக்கை பிடித்து கீழே தள்ளியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் வைக்கப்பட்ட நாற்காலிகளை உடைத்து எறித்தனர். இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினரின் நடத்திய ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மொரப்பூர் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com