அதிக இடங்களை வென்றது திமுக கூட்டணி: ஆட்சியமைக்கிறார் மு.க.ஸ்டாலின்

அதிக இடங்களை வென்றது திமுக கூட்டணி: ஆட்சியமைக்கிறார் மு.க.ஸ்டாலின்

அதிக இடங்களை வென்றது திமுக கூட்டணி: ஆட்சியமைக்கிறார் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டும் 111 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தலா 4 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் இரண்டும் தலா 2 இடங்களிலும் வென்றுள்ளன. திமுக கூட்டணியில் பிற கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வென்றுள்ளன. திமுக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

ஆளும் அதிமுக கூட்டணி 65 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் 58 இடங்களில் வென்றுள்ளது. 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 3 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை எந்த ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com