வெளியானது திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல்

வெளியானது திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல்

வெளியானது திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல்
Published on

மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.

பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அந்தந்த அரசியல் கட்சிகள் பேசி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது. 

அதன்படி மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிளும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருச்சி, கரூர், கிஷ்ணகிரி, திருவள்ளூர்,ஆரணி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. ஐஜேகே கட்சி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறது.  வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. மீதம்முள்ள 20 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 

திமுக போட்டியிடும் தொகுதிகள்: 

தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஶ்ரீபெரம்பத்தூர், அரக்கோணம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை,தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com