திமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை

திமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை

திமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை
Published on

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

கடந்த 19-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டப்பேரவைத்  தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து வருகிறார். திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிராவிடம் முன்னிலை வகித்து வருகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார். சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை 12 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com