திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் : காவல்துறை அனுமதி மறுப்பு

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் : காவல்துறை அனுமதி மறுப்பு

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் : காவல்துறை அனுமதி மறுப்பு
Published on

திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.

இந்தக் கூட்டம் தொடர்பாக திமுக சார்பில் காவல்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் காணோளிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com