’2011ல் 71.3%, 2022ல் 12%’ - திமுக, அதிமுக உள்ளாட்சித் தேர்தல் ஒப்பீடு - ஓர் அலசல்!

’2011ல் 71.3%, 2022ல் 12%’ - திமுக, அதிமுக உள்ளாட்சித் தேர்தல் ஒப்பீடு - ஓர் அலசல்!
’2011ல் 71.3%, 2022ல் 12%’ - திமுக, அதிமுக உள்ளாட்சித் தேர்தல் ஒப்பீடு - ஓர் அலசல்!

தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றி விகிதத்தை விட கடந்த 2011ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிக விகிதத்தில் வெற்றி பெற்றிருந்தது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மாநகராட்சிகளில் 69.3 சதவிகிதம் வார்டுகளில் வெற்றியை குவித்துள்ளது. அதுவே 2011ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சியாக இருந்தப்போது திமுக 15.9 சதவிகித வார்டுகளில் வெற்றியை பதிவு செய்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 71.3 சதவிகிதம் வார்டுகளை பெற்றிருந்த நிலையில், தற்போது 12 சதவிகித வார்டுகளாக சரிந்துள்ளது.

நகராட்சி வார்டுகளில் தற்போது 61.4 சதவிகிதம் வெற்றியை வசப்படுத்தியுள்ள திமுக, 2011ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்தப்போது வெற்றி சதவிகிதம் 26.1 ஆக இருந்தது. எதிர்க்கட்சியான அதிமுக தற்போது 16.6 சதவிகித வார்டுகளை பெற்றிருக்கும் நிலையில், 2011ல் ஆளும் கட்சியாக இருந்தபோது 45.7 சதவிகிதம் வெற்றியை வசமாக்கியிருந்தது.

அதேபோல், பேரூராட்சி வார்டுகளில் திமுக 57.7 சதவிகிதம் வெற்றிவாகை சூடியுள்ளது. 2011ல் எதிர்க்கட்சியாக இருந்தப்போது 22 புள்ளி ஒரு சதவிகிதம் வெற்றியை பதிவு செய்திருந்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 35.3 சதவிகித வார்டுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 15.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com