ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்: மோதும் அண்ணணும் தம்பியும்

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்: மோதும் அண்ணணும் தம்பியும்
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்: மோதும் அண்ணணும் தம்பியும்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் அண்ணணும், தம்பியும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. 

18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் நேற்று வெளியிட்டன. அதன்படி ஆண்டிப்பட்டி தொகுதியில், அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ள லோகிராஜனுக்கு அதே தொகுதியில் போட்டியிட அக்கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையில், ஆண்டிப்பட்டி திமுக ஒன்றிய பொறுப்பாளரான மகாராஜனை திமுக களமிறக்கியுள்ளது. 

(லோகி ராஜன்)

திமுக சார்பில் களம் இறக்கப்படும் மகாராஜன், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகி ராஜனின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும், திமுக, அதிமுக என எதிரெதிர் அணியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது, ஆண்டிப்பட்டி தேர்தல் களத்தில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com