தமிழ்நாடு
காவிரி: திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரி: திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது.
திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து வருகிறது. மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதச் சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.