\
தேமுதிக நிர்வாகி நள்ளிரவில் குத்திக்கொலை!

தேமுதிக நிர்வாகி நள்ளிரவில் குத்திக்கொலை!

தேமுதிக நிர்வாகி நள்ளிரவில் குத்திக்கொலை!
Published on

திருத்துறைப்பூண்டி அருகே தேமுதிக நிர்வாகி மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (40). கேபிள் டிவி நடத்தி வந்த இவர், தேமுதிக ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்தார்.

நேற்று இரவு வேப்பஞ்சேரி கிராமத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் மாணிக்கவாசகம் கிடந்தார். அந்த வழியாகச் சென்ற சிலர், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா, அல்லது அரசியல், தொழில் போட்டிக் காரணமாகக் கொல்லப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com