”ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்” - விஜயகாந்த் மறைவுக்கு ஆளுநர் தமிழிசை, திருமாவளவன் இரங்கல்

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.
vijayakanth
vijayakanthfile

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

thirumavalavan
thirumavalavanpt web

திருமாவளவன் இரங்கல்

”தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. கேப்டன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

governor tamilisai
governor tamilisaipt desk

நல்ல திரைப்படக்கலைஞர்.... நல்ல அரசியல் தலைவர்.... நல்ல மனிதர்.... நல்ல சகோதரர்.... ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்... சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் காலைக் காட்சி ரத்து செய்யப்படுவதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com