தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி... உடல்நிலை எப்படி இருக்கிறது?

சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் சளி உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த 18ஆம் தேதி இரவில், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் உள்ளதாலும், உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜயகாந்த்துக்கு மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருப்பினும், அவர் தாமாகவே சுவாசித்து வருவதோடு, உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com