தமிழ்நாடு
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்ற பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில் விஜயாகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2006 தேர்தலில் விருத்தாச்சலம், 2011 தேர்தலில் ரிஷிவந்தயம் தொகுதியில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த். 2016 தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.