தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
Published on

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இன்று முதலே இயக்கப்படுகின்றன. 

தீபாவளி பண்டிகை 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக மக்கள் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக 5ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை என நான்கு நாட்கள் தெடர்ந்து அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. எனவே மக்கள் பலரும் இன்று முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர். 

இதனையொட்டி சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக இன்று முதல் சுமார் 21 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதனையொட்டி மக்கள் பேருந்துகளில் எவ்வித சிரமமுமின்றி பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதாவரம் பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகள் 5-ம் தேதியும், தமிழகத்தின் பிற இடத்தில் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com