தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம்  இன்று திறப்பு

தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு

தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு
Published on

தீபாவளி பண்டிக்கைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய சிறப்பு முன்பதிவு மையம் இன்று திறக்கப்பட இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் 3-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதாவரம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகள் 5-ம் தேதியும், தமிழகத்தின் பிற இடத்தில் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இதற்கான முன்பதிவு மையத்தை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு மையத்தில் சிறப்புப் பேருந்துகளில் செல்லவும், பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com