தீபாவளிக்கு இன்னும் ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடை மற்றும் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை களைகட்டியுள்ளது. ஆடை, பட்டாசு மற்றும் இனிப்பு உள்ளிட்ட திண்பண்டங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இதேபோல் வீட்டு உபயோக பொருள்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களின் விற்பனையும் ஒருபுறம் நடந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம். பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடியுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.