\
தீபாவளியை முன்னிட்டு 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
Published on


தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் அரசால் இயக்கப்படும் 3,812 சிறப்பு பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை, தாம்பரம்‌ சானிட்டோரியம் ஆகிய 5 பகுதி‌களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையங்களிலிருந்து சென்றிருக்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் இந்த தக‌வல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com