\
இளம் பெண்களை கவரும் மஸ்துகலி, லெஹங்கா ஆடைகள்

இளம் பெண்களை கவரும் மஸ்துகலி, லெஹங்கா ஆடைகள்

இளம் பெண்களை கவரும் மஸ்துகலி, லெஹங்கா ஆடைகள்
Published on

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதை அடுத்து மஸ்துகலி, லெஹங்கா என்ற ஆடைகளை வாங்க இளம் பெண்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் ஆடை விற்பனை களை கட்டியுள்ளது. இந்நிலையில் இளம் பெண்களுக்காக புதிய ரக ஆடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மஸ்துகலி, லெஹங்கா என்ற இரு ஆடை ரகங்கள் இளம்பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளன. 15 டிசைன்களில் வெளிவந்துள்ள மஸ்துகலி சுடிதார் விற்பனைக்கு வந்த உடனே, அனைத்தும் விற்பனையாகிவிடுவதாக துணிக்கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் குந்தன் கல் வேலைப்பாடுடைய லெஹங்கா போன்ற ஆடைகள் ரூ.3000 முதல் ரூ.15,000 வரை விற்கப்படுகிறது, விலை கூடுதலாக இருந்தாலும் இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com