களை கட்டுகிறது தீபாவளி : நெல்லையில் பரபரக்கும் பலகாரக் கடைகள்

களை கட்டுகிறது தீபாவளி : நெல்லையில் பரபரக்கும் பலகாரக் கடைகள்

களை கட்டுகிறது தீபாவளி : நெல்லையில் பரபரக்கும் பலகாரக் கடைகள்
Published on

தீபாவளி பண்டிகைக்காக நெல்லையில் பாரம்பரிய பலகாரங்கள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இதற்காகவே பலகார கடைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தீபாவளி பண்டிகை என்றால் அதில் புத்தாடைகளை தாண்டி விழா நாளுக்காக தயாரிக்கபடும் பலகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கும். தற்போதைய கால சூழலில் வீட்டிலேயே அனைத்து வகையான பலகாரங்களும் செய்யும் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது. நகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டில் பலகாரங்களை தயார் செய்வதைக் காட்டிலும் கடைகளில் வாங்குவதையே பெரும்பாலும் வழக்கமாக வைத்துள்ளனர். 
நெல்லை - பாளையங்கோட்டையில் சிறிய அளவிலான பலகாரக் கடைகள் தீபாவளி நெருங்கி வருவதால் இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டன.
பலகாரங்கள் தயார் செய்யும் பெண்கள், புழுங்கல் அரிசியினால் செய்யபடும் கைசுற்று முறுக்கு, அதிரசம், தட்டை, அச்சுமுறுக்கு போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். தரமான பொருட்கள், பாரம்பரியமாக செய்யப்படும் அரிசி பலகாரங்கள், இரண்டு மாதம் என்றாலும் கெட்டு போகாது என்பதால் வெளிந‌டுகளுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுவதாக கூறுகிறார்க‌ள் கடை உரிமையாளர்கள்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com