தமிழ்நாடு
உழவர் சந்தையில் ஊழல் புகார்: காய்கறிகளுடன் விவசாயிகள் மனு
உழவர் சந்தையில் ஊழல் புகார்: காய்கறிகளுடன் விவசாயிகள் மனு
உழவர் சந்தையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. காய்கறிகளுடன் விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்ட சம்பவம் பொது மக்கள் வனத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பதன பெட்டிகள் மற்றும் உரம் தயாரிக்கும் கிடங்கை பயன்படுத்தாமல் உள்ளனர் என்றும், விவசாயிகளுக்கு உரிய முறையில் இடம் கொடுப்பதில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனால் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் காய்கறிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.