சாதிய வன்கொடுமை : மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்

சாதிய வன்கொடுமை : மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்

சாதிய வன்கொடுமை : மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்
Published on

மன்னார்குடி அருகே பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாயில் மலத்தை திணித்து சாதிய வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு முதல் கட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ளார்.

மன்னார்குடி அருகே உள்ள திருவண்டுதுறை கிராமத்தில் வசித்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்பவரது வாயில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ், ராஜ்குமார் ஆகிய மூன்று பேர், மலத்தை திணித்தும், சிறுநீரை ஊற்றியும் சாதிய வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,விசாரணை நடத்திய காவல்துறையினர் சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பட்டியல் இனத்தவர் மீதான சாதிய வன்கொடுமை தொடர்பாக தமிழக அரசிடம் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து காவல்துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 5 வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வன்முறையை மனதில் வைத்து தன்னை கொடுமைப்படுத்தியதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com