\
திருவள்ளூர் மாவட்டத்தில் 627 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

திருவள்ளூர் மாவட்டத்தில் 627 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

திருவள்ளூர் மாவட்டத்தில் 627 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் 627 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொன்னையா தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், படிவங்கள் உள்ளிட்ட பணிகளை அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்து செல்லும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொன்னையா ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் 4902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 627 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்னையா தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com