\
ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு!

ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு!

ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு!
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் 969ல் இருந்து 1075 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

அத்துடன் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட வங்கிக் கிளைகளை மூட மேலாளர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com