குறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்

குறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்

குறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்
Published on

நீலகிரியில் முதல் முறையாக நடைபெறும் குறிஞ்சி பூ திருவிழாவை துவக்கி வைத்து படுக இன மக்களுடன் மாவட்ட ஆட்சியர் நடனமாடினார்.

நாடு முழுவதும் 200 க்கும் மேற்ப்பட்ட குறிஞ்சி மலர்கள் காணப்பட்டாலும், குறிஞ்சி மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் வன வளத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 46 வகையான குறிஞ்சி மலர்களை தமிழகம் மற்றும் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில்தான் காண முடியும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் வெள்ளை நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த பூக்கள் நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, சின்னகுன்னூர் , கீழ்கோத்தகிரி , சோலூர் , நடுவட்டம் , கல்லட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மலைகள் முழுவதும் பூத்து குலுங்குகின்றன.

இந்நிலையில் இந்த மலர்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டு வன மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை ஏற்று மாவட்ட நிர்வாகம் குறிஞ்சி பூ திருவிழா கொண்டாட முடிவு செய்தது. அதன் பேரில் உதகை கல்லட்டி மலை பாதையில், முதன் முறையாக குறிஞ்சி பூ திருவிழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த விழாவில், படுக இன மக்கள் தங்களது பாரம்பரிய பழங்குடியின நடனத்தை ஆடினர்.

அப்போது படுக இன மக்களுடன் இணைந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாயும் நடனமாடியது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. மேலும் இரண்டாம் சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் இந்த அபூர்வ குறிஞ்சி மலர்களை கண்டு களிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.

வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் மினியேச்சர் தற்போது பூங்காக்களிலும், வீட்டு தோட்டங்களிலும் காண முடிகிறது. இவை மிக குறைந்த அளவே மட்டுமே பூக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி தான் மிகவும் பிரபலம். தற்போது குறிஞ்சி பூத்துள்ள நிலையில் தேனீக்கள் தேன் எடுக்க அதிகளவு காணப்படுகிறது. இவை விவசாயத்திற்க்கும், வனங்கள் வளர்ச்சிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதால் நீலகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தகவல்கள் : என். ஜான்சன், செய்தியாளர் -நீலகிரி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com