இலவச பயணம் என்று கூறி பெண் பயணிக்கு அவமரியாதை - ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

இலவச பயணம் என்று கூறி பெண் பயணிக்கு அவமரியாதை - ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!
இலவச பயணம் என்று கூறி பெண் பயணிக்கு அவமரியாதை - ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

கரூரில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து ஆலமரத்துபட்டி சென்ற அரசு நகரப்பேருந்து, கோடங்கிபட்டி அருகே வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கோடங்கிபட்டியில் ஒரு தாய், அவரது மகள் இருவரும் ரேஷன் கடையில் வாங்கிய பொருட்களை பேருந்தில் எடுத்து வைக்கும் சமயத்தில் திடீரென்று பேருந்தினை ஓட்டுநர் இயக்கியுள்ளார்.

உடனடியாக பேருந்தில் சிறுமி ஏறிய நிலையில், தாய் ஏறுவதற்கு முன்னர் பேருந்தினை எடுத்ததால் அந்த சிறுமியின் தாய் “என் பிள்ளை, என் பிள்ளை” என்று சாலையில் கதறியுள்ளார். பின்னர் அந்த பேருந்தின் பின் தொடர்ந்து துரத்தி பிடித்த மக்கள் பேருந்தினை சிறைபிடித்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள், மகளிருக்கு இலவச பேருந்து என்று சொன்னதிலிருந்து மகளிரை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மதிப்பதில்லை என்றும், நாயை விட கேவலமாக நடத்துவதாகவும், மிகக்கடுமையான வார்த்தையில் இவ்வழியாக செல்லும் அரசு பேருந்து நடத்துநர்கள் ஆபாசமாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்த வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதனையடுத்து கரூர் மண்டல பொது மேலாளர் குணசேகரன் உத்தரவின் பேரில் நகரப் பேருந்து ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் நடத்துனர் மகேந்திரன் ஆகியோரை காரைக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ராஜமோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com