\
'தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது முக்கியமானது’ - கமல்ஹாசன்

'தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது முக்கியமானது’ - கமல்ஹாசன்

'தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது முக்கியமானது’ - கமல்ஹாசன்
Published on

 'கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பு நிகழ்வையொட்டி ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்ற தலைப்பில் இன்று நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையவழி கருத்தரங்கில் பேசிய கமல்ஹாசன்,

“தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது. விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டுமே செய்யும் விஷயம் அல்ல” என்று பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com