\
நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தகராறு: திமுகவினர் மீது நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன்

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தகராறு: திமுகவினர் மீது நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன்

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தகராறு: திமுகவினர் மீது நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன்
Published on

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவிலைச் சேர்ந்த மொழிப்போர் தியாகியான கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப் படவேண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் திமுக அரசு தடுப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் எல்லா அதிமுகவினர் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில காவல்துறை சட்டபூர்வமாக கடமையை செய்கிறார்கள் இதில், அரசு உள்நோக்கத்தோடு அதிமுகவை பழி வாங்குகிறது என பார்க்கத் தேவையில்லை என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com