தமிழ்நாடு
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து கலந்தாய்வை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்தது. ஒரு நாள் கூட முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

