தமிழக விவசாயிகள் மீது பாரபட்சம்: நடிகர் பிரகாஷ் ராஜ்
தமிழக விவசாயிகள் மீது பாரபட்சம் காட்டுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவருக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவருடன் நடிகர் பிரகாஷ் ராஜ் உடனிருந்தார். அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், டெண்டுல்கர் செஞ்சுரி அடித்தால் அவரை இந்தியர் என்கிறோம். ஆனால் தமிழக விவசாயிகளைப் புறக்கணிக்கிறோம். விவசாயிகள் என்றாலே, இந்திய விவசாயிகள் தானே.
ஜப்பானில் 7 சதவிகிதம் உள்ள விவசாயிகளை கொண்டு நாடு செழிப்படைகிறது. அங்குள்ள மாடுகளுக்கு கூட இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆனால் தமிழக விவசாயிகள் பாரபட்சத்துடன் பார்க்கப்படுவதாகக் கூறினார். விவசாயிகள் பிரச்னை சம்பந்தப்பட்டவர்களுக்குச் செல்லும் வகையில் அந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததாகவும் பிரகாஷ் ராஜ் சொன்னார்.