\
முடிச்சூரில் பேரிடர் மீட்புக் குழு

முடிச்சூரில் பேரிடர் மீட்புக் குழு

முடிச்சூரில் பேரிடர் மீட்புக் குழு
Published on

கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முடிச்சூர் பகுதியில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய தலைமுறையின் கட்டுப்பாட்டு அறை செய்தியை அடுத்து அங்கு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்புவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முடிச்சூர் சென்ற மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள், லட்சுமிபுரம், கிருஷ்ணநகர் உள்ளிட்ட பல இடங்களில் மீட்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, முடிச்சூரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com