இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்... தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்... தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்... தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை அடையாறில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையில் இருந்து 830 கிலோமீட்டர் தொலைவில் இப்புயல் மையம் கொண்டு இருக்கிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், புயல் கரையை கடக்க கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் இன்று முதல் 10-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவைச் சேர்ந்த 35 பேர் அதிகாரி சந்திப் குமார் தலைமையில் தயார் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு, ஜெனரேட்டர் டார்ச் லைட், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களுடன் தயாராக இருக்கக்கூடிய நிலையில் கடற்கரை ஓரம் மற்றும் ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடிய பகுதி மக்களுக்கு மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தயாராக இருப்பதாகவும் தேவைப்பட்டால் வெளி மாவட்டத்திற்கு செல்வதற்கும்  தேசிய பேரிடம் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள்  தயாராக இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com