தமிழ்நாடு
செல்ஃபி மோகத்தால் விபரீதம்: டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
செல்ஃபி மோகத்தால் விபரீதம்: டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன மோட்டூரில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சஞ்சீவி என்பவர் உறவினருடன் டிராக்டரில் விளைநிலத்தை உழுதுள்ளார். உறவினர் சாப்பிட சென்ற நேரத்தில் டிராக்டர் இயக்குவது போல் சஞ்சீவி செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக இயங்கிய டிராக்டருடன் சஞ்சீவி 60 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சஞ்சீவின் உடலை மீட்டனர். செல்பி மோகத்தில் கவனக்குறைவாக டிராக்டரை இயக்கியதால், இளைஞர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.