\
முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவி: ஓடிவந்து உதவிய எம்எல்ஏ

முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவி: ஓடிவந்து உதவிய எம்எல்ஏ

முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவி: ஓடிவந்து உதவிய எம்எல்ஏ
Published on

மாற்றுத் திறனாளி மாணவியின் கோரிக்கையை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடனடியாக நிறைவேற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா, தான் பள்ளிக்குச் சென்றுவர மிகவும் சிரமப் படுவதாகவும் அதனால் நாற்காலி ஸ்கூட்டரை வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

இதை அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை அந்த மாணவிக்கு வழங்கி, தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து அந்த பேட்டரி வாகனத்தில் அமர்ந்து இயக்கி பார்த்து சந்தோஷம் அடைந்த சந்தியா, தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com