\
மாற்றுத்திறனாளி சேவகர்கள் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளி சேவகர்கள் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளி சேவகர்கள் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளில் ஈடுபடும் சமூக சேவகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திக்குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சிறந்த பணியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் 20 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகள் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று வழங்கப்படும். விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரிலோ அல்லது இணையதளம் வழியாகவோ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பெற அலுவலக முகவரி: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், 5, காமராசர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை - 5

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.10.2020

இணையதள முகவரி: www.scd.tn.gov.in

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com