\
தங்கமணி உறவினர் வீடுகளில் சல்லடைப்போடும் லஞ்ச ஒழிப்பத்துறை

தங்கமணி உறவினர் வீடுகளில் சல்லடைப்போடும் லஞ்ச ஒழிப்பத்துறை

தங்கமணி உறவினர் வீடுகளில் சல்லடைப்போடும் லஞ்ச ஒழிப்பத்துறை
Published on

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜெய ஸ்ரீ பிளைவுட்ஸ் எனும் அவரது உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனான தினேஷ் குமாருக்கு சொந்தமான ஸ்ரீ பிளைவுட்ஸ் மற்றும் ஜெயஸ்ரீ டைல்ஸ் & வுட்ஸ் நிறுவனம் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ள ஈவேரா பெரியார் சாலையில் அமைந்துள்ளது. காலை 6:15 மணிக்கு தொடங்கிய சோதனையில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் தொடர்புடைய அரும்பாக்கம், பனையூர், செனாய் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக 30க்கும் மேற்பட்ட காவலர்கள் அரும்பாக்கத்தில் சோதனை நடைபெறும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம், ஆந்திரா உட்பட நாடு முழுவதும் உள்ள 69 இடங்களில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com