இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது அவரது உறவினர்கள் திடீர் புகார்.. என்ன காரணம்?

திருச்சி மாவட்டம் லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் மீது அவரது சித்தப்பா குஞ்சிதபாதம் புகார் அளித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். இவரின் சகோதரர்கள் லால்குடி மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் அளித்தனர்.

அதில், தங்களை ஏமாற்றி மோசடியாக பொதுச் சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நிலத்தை மீட்டு தரவேண்டும் என மனு குறிப்பிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com