“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்” சீனு ராமசாமி திடீர் ட்வீட்

“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்” சீனு ராமசாமி திடீர் ட்வீட்

“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்” சீனு ராமசாமி திடீர் ட்வீட்
Published on

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான அவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஜய்சேதுபதியை ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இந்த கூட்டணி 3 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில், 800 பட விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை சீனு ராமசாமி கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com