‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்

‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்

‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்
Published on

குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என இறைவனை வேண்டுவதாக இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டரை வயது குழந்தை சிக்கிக் கொண்டான் என்ற செய்தி கேட்டதும் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்தவன் தான். டிவி பார்த்துக் கொண்டே இருக்கிறேன், எனக்கு அழுகை வந்துகொண்டே இருந்தது. அப்பொழுதுதான் அந்த குழந்தைக்காக இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்தேன். 

ஒரு நம்பிக்கைதானே. எத்தனையோ நோயில் இருந்து, சிகிச்சையில் இருந்து மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது என கைவிடப்பட்டவர்களுக்கு கூட கடவுள் அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டுவோம்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கு சமூக உணர்வு வேண்டும். அப்படி சமூக உணர்வுள்ள இளைஞர்கள், குறிப்பாக என் மகன் விஜயின் ரசிகர்களிடம் நான் ஒன்றினை கேட்டுக் கொள்கிறேன். அவர்களை நான் பிள்ளைகளாக நினைக்கிறேன். அதனால் அப்பாவைப் போன்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழ்கிற கிராமம், நகரம் எதுவாக இருந்தாலும் அந்தப் பகுதிகளில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com