அமீர் பேச்சுக்கு இயக்குநர் பேரரசு கருத்து
அமீர் பேச்சுக்கு இயக்குநர் பேரரசு கருத்துமுகநூல்

”வேற்று மதத்தவரான உங்களுக்கு இந்து மதத்துக்குள் என்ன வேலை” - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரியளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.
Published on

மதுரையில் இந்து முன்னணி சார்பாக நாளைய தினம் (22.6.2025) முருகன் மாநாடு நடக்கயிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்தநிலையில், பக்தர்கள் பலரும் வருகை தர தொடங்கி இருக்கின்றனர். நாளை நடக்கவுள்ள மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆனால், இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய இயக்குநர் அமீர், இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர் பெயரில் அரசியல் செய்பவர்கள்தான். அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரியளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.

” இன்னொரு மதத்திற்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நீங்கள் ( இயக்குநர் அமீர்) இல்லை. அதை நீங்கள் செய்யவும் கூடாது. நீங்கள் இந்து மதத்தில் இருந்து தெய்வ பக்தியுடையவராக இருந்து.... இப்படி ஒரு கருத்தை சொல்லியிருந்தால் அதை பற்றி யோசனை செய்திருக்கலாம்.

ஆனால், நீங்கள் இருப்பது மற்றொரு மதம் , இந்து மதத்துக்குள் உங்களுக்கு என்ன வேலை. ” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com