பாக்யராஜ்
பாக்யராஜ் புதிய தலைமுறை

RIP Vijayakanth | “ரசிகர்கள் மீது உயிரையே வைத்திருந்தார் விஜயகாந்த்” - பாக்யராஜ் உருக்கம்

“ ‘ஞாயிற்றுக் கிழமை ஒருநாள்... எனக்காக அன்றைக்கு மட்டும் சூட்டிங் வேண்டாம். நான் அன்றைக்கு ரசிகர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்’ என்பார் விஜயகாந்த்” - பாக்யராஜ்
Published on

இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர் மத்தியில் பேசிய அவர், “விஜயகாந்த் அவர்களை வைத்து சொக்கத்தங்கம் படத்தை இயக்கியபோது, அவர் என்னிடம், ‘அண்ணே எனக்காக ஒன்னே ஒன்னு விட்டுக் கொடுக்கணும்’னு கேட்டார்.

நான் என்னவென்றேன். ‘அவுட்டோர்ல சூட்டிங் எடுக்கும்போது ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் எனக்காக அன்றைக்கு மட்டும் சூட்டிங் வேண்டாம். நான் அன்றைக்கு ரசிகர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அவர்களோடு மதியம் வரை இருந்து அவர்களை மதியம் சாப்பிட வைக்கணும்’ என சொன்னார். அந்த அளவுக்கு அவரு ரசிகர் மன்றத்தை உயிராக மதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடை வளர்ச்சி கண்கூடாக தெரிந்தது” என்று பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com