”விஜயகாந்த் இறந்த செய்தியைக் காலையில் கேட்டவுடன் ஜீரணிக்கவே முடியவில்லை” - இயக்குநர் பாரதிராஜா

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்
விஜயகாந்த் மறைவு
விஜயகாந்த் மறைவுபுதிய தலைமுறை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். விஜயகாந்த் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மறைவு குறித்து இயக்குநர் பாரதிராஜா, “சில விஷயங்களை சந்தோஷமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் சில நேரங்களில் சில விஷயங்களை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் சிறந்த கலைஞன்; சிறந்த மனிதாபிமானி. அவர் இறந்த செய்தியைக் காலையில் கேட்டவுடன் ஜீரணிக்கவே முடியவில்லை. எது நடைபெறக் கூடாது என்று நினைத்தோமா அது நடந்துவிட்டது.

இவ்வளவு சீக்கிரம் கடவுள் அவரை அழைத்துக்கொள்வார் என நினைக்கவில்லை. சினிமாவில் சம்பாதித்து அள்ளிக்கொடுத்தவர் விஜயகாந்த். எந்நாளும் அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிடாதவர்களே கிடையாது. அவருடன் ஒரு படத்தில்தான் நான் இணைந்திருக்கிறேன். ஆனால், அவரோடு சேர்ந்து நடித்தவர்களுக்கும் பழகிப் பார்த்தவர்களுக்கும்தான் தெரியும் அவர், எவ்வளவு பெரிய மனிதர் என்று” அவர் பேசிய கருத்துகளை முழுவதுமாகக் கேட்க இதுகுறித்த பதிவை இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com