ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு... இயக்குநர்கள் சங்கம் வேலை நிறுத்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு... இயக்குநர்கள் சங்கம் வேலை நிறுத்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு... இயக்குநர்கள் சங்கம் வேலை நிறுத்தம்
Published on

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தில் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாக்க தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் வெடித்து கிளம்பியிருக்கும் இளம் ரத்தங்களின் போர்க்குரலுக்கு உத்வேகமளிக்கும் விதமாக நாளை அடையாள வேலை நிறுத்தம் இயக்குநர்கள் சங்கம் சார்பில் முடிவெடுத்துள்ளது. ஆகவே நாளை ஒரு நாள் (19.01.2017) படப்பிடிப்புகள், டப்பிங், பாடல் பதிவு, படத்தொகுப்பு உள்பட எந்த பணிகளும் நடைபெறாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை இயக்குநர்கள் சங்க அலுவலகம் அருகே 10.30 மணி அளவில் ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com