நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் காமராஜ் விளக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் காமராஜ் விளக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள நெரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதாவது, ‘ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை, செப்டம்பர் 30 தேதிக்குள் அரைத்து அரிசியாக கொடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 31.08.2018க்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என துணை மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி மூலமாக பேசிய அமைச்சர் காமராஜ், நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பராமரிப்புக்காக நெல் கொள்முதல் நிலையங்களின் இரு மாதங்கள் மூடப்படுமென்றும் அவர் கூறினார். இருப்பினும், நெல் வரத்து இருக்கும் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் இந்த விளக்கத்தினை அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com