தமிழ்நாடு
“சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவை தேவை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவை தேவை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கக்கோரி மத்திய விமானத்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சிங்கப்பூர், மலேசியாவுடன் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கோவிட் கால விமானப் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் செய்யாததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நேரடி விமான சேவை இல்லாததால் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து தமிழ்நாடு திரும்ப நினைப்பவர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக வர வேண்டியுள்ளது என கூறியுள்ளார். இதனால் அதிக விமான கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் பயன் பெற ஏதுவாக நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.